Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

அங்காய பொடி கலந்த தக்காளி சாதம்

அங்காய பொடி கலந்த தக்காளி சாதம்

அங்காய பொடி:

சூடான சாதத்துடன் சிறிது நெய் விட்டு 1 ஸ்பூன் அங்காய பொடி சேர்த்து பிசைந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம். ஆனால் , அங்காய பொடி சிறிது கசப்பு தன்மை இருப்பதால் குழந்தைகள் உண்ண அடம் பிடிப்பார்கள். சில சமயம் பெரியவர்களும். 🙂

அதனால், தக்காளி கலவை சாதத்துடன் அங்காய பொடி சேர்த்து செய்யலாம் என யோசனை தோன்ற , அது மிக சுவை மிகுந்ததாக இருந்தது. அந்த செய்முறை உங்கள் பார்வைக்காக.

தேவையான பொருட்கள்:

சாதம் – 1 கப்
பழுத்த தக்காளி – 3
பச்சை மிளகாய் – 1
கடுகு – 1 /2 ஸ்பூன்
சீரகம் – 1 / 2 ஸ்பூன்
பெருங்காய தூள் – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் -1 /2 ஸ்பூன்
அங்காய பொடி – 1 ஸ்பூன்
எண்ணெய்- 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 8
உப்பு – தேவையான அளவு

செய்முறை

அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு சிட்டிகை பெருங்காய தூள் போட்டு பொரிந்ததும் அதில் கடுகு , கருவேப்பிலை போட்டு தாளித்து , பொரிந்ததும் சீரகம் போட்டு வறுக்கவும் .

அதில் நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

நறுக்கிய தக்காளி பழங்களை போட்டு நன்கு வதக்கி, அதில் தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள், அங்காய பொடி இவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விடவும்.

சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை மூடி போட்டு வேக வைக்கவும்.நன்கு கெட்டியானதும் , சூடான சாதத்தை அதில் கொட்டி நன்கு கிளறி சூடாக பரிமாறவும்.

சுவை அற்புதமாக இருக்கும்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *