Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

அங்காய பொடி

அங்காய பொடி

தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகளில் அங்காய பொடியும் முக்கிய பங்கு வகிக்கிறது . நிறைய மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்கள் நிறைந்தது .குழந்தை பெற்ற பெண்களுக்கு கொடுக்க படும் பொடி என்றாலும் , இந்த பொடியை அனைவருமே 15 நாட்களுக்கு ஒரு முறை உணவில் சேர்த்து கொள்ளலாம் . வயிறு உபாதைகள் , அஜீரணம் ,சளி , இருமல் தொல்லைகள் , வாய்ப்புண் , தொண்டை புண் இவற்றை போக்கும் சிறந்த நிவாரணியாக இருக்கிறது .சுண்டைக்காய் , வேப்பம்பூ , மணத்தக்காளி தவிர , நம் சுவைக்கு ஏற்ப மற்ற பொருட்களை கூட குறைய சேர்த்து கொள்ளலாம்.


Ingredients Photo Courtesy : Google

அங்காயப்பொடியின் மருத்துவ பலன்கள்:

வேப்பம்பூ – கண்பார்வைக்கு உகந்தது.ஜீரண கோளாறுகளை நிவர்த்தி செய்ய கூடியது.கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை நீக்க கூடியது.குடற்புழுக்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சுண்டைக்காய் வத்தல் – பெருங்குடல் அழற்சி, அமீபியா பாக்டீரியா போன்றவற்றால் ஏற்படும் வயிற்றுக்கடுப்பு இவற்றை போக்கும் மிக சிறந்த நிவாரணி இந்த சுண்டைக்காய் விதைகளில் மட்டுமே உள்ளது.

மணத்தக்காளி வத்தல் – வாய்ப்புண் நீக்குவதற்கும் , விட்டமின் B குறைபாடு நீக்குவதற்க்கும் ,வாயு பிரச்சனைகள் நீக்குவதற்க்கும் உபயோக படுத்த படுகிறது .

மல்லி விதைகள்– மிக சிறந்த Anti-Oxidant

கறிவேப்பிலை – இளநரை தடுக்கவும் , இரும்பு மற்றும் நார் (Fiber) சத்து நிறைந்தது .

சீரகம் – பெயரிலேயே அர்த்தம் நிறைந்தது . சீரகம்= சீர்+அகம். .அகத்தை சீர் செய்ய கூடியது .ஜீரண கோளாறுகளை சரி செய்ய கூடியது.

சுக்கு மற்றும் பெருங்காயம் – இதுவும் ஜீரண கோளாறுகளை சரி செய்ய கூடியது.

தேவையான பொருட்கள் :
காய்ந்த வேப்பம்பூ – 1 கப்

காய்ந்த சுண்டைக்காய் வத்தல் – 1 கப்

காய்ந்த மணத்தக்காளி வத்தல் – 1 கப்

வர மல்லி விதை : 1 /2 கப்

காய்ந்த மிளகாய் -1 அல்லது 2

மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

சுக்கு பொடி – 1 /4 ஸ்பூன்

துவரம் பருப்பு /கடலை பருப்பு – 1 ஸ்பூன்

கடுகு – 1 /2 ஸ்பூன்

பெருங்காய பொடி – 1 /2 டீ ஸ்பூன்

கல் உப்பு – சுவைக்கு ஏற்ப

செய்முறை

மேலே குறிப்பிடப்பட்டு உள்ள அனைத்து பொருட்களையும் தனி தனியாக வறுத்து,ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும்.

கல் உப்பையும் தனியாக வெறும் வாணலில் இட்டு வறுத்து கொள்ளவும். அதையும் அனைத்து பொருள்களோடு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

சூடான சாதத்துடன் சிறிது நெய் விட்டு 1 ஸ்பூன் அங்காய பொடி சேர்த்து பிசைந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம்.

குறிப்பு

சூடான சாதத்துடன் சிறிது நெய் விட்டு 1 ஸ்பூன் அங்காய பொடி சேர்த்து பிசைந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம். ஆனால் , அங்காய பொடி சிறிது கசப்பு தன்மை இருப்பதால் குழந்தைகள் உண்ண அடம் பிடிப்பார்கள். சில சமயம் பெரியவர்களும்.

அதனால், தக்காளி கலவை சாதத்துடன் அங்காய பொடி சேர்த்து செய்யலாம் என யோசனை தோன்ற , அது மிக சுவை மிகுந்ததாக இருந்தது.

அந்த செய்முறை உங்கள் பார்வைக்காக. அதை தெரிந்து கொள்ள இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும்.

அங்காய பொடி கலந்த தக்காளி சாதம்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *