Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

இளநீர் பாயசம்

இளநீர் பாயசம்

இது செய்வதற்கு மிகவும் சுலபமான, பருகுவதற்கு மிகவும் சுவையான இனிப்பு வகை ஆகும். அடுப்பில் வைத்து சமைக்க வேண்டிய அவசியம் இல்லை.
செய்வதற்கு ஆகும் நேரம் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே. விருந்தினர் வருகையில் வித்தியாசமாக இந்த பாயசத்தை செய்து அசத்தலாம்.

தேவையான பொருட்கள்:
வழுக்கையுடன் கூடிய இளநீர் – 1
கண்டெண்ஸ்ட் மில்க் -60 மேல்
பொடித்த ஏலக்காய் – 2
தேங்காய் துருவல் -சிறிது

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி கொள்ளவும்.
இளநீர் உள்ளே இருக்கும் வழுக்கையை மிக்ஸியில் இட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைப்பதற்கு தண்ணீர் சிறிது தேவைப்பட்டால் இளநீரை சேர்த்து கொள்ளலாம்.
அரைத்த விழுதை மீதமுள்ள இளநீருடன் கலந்து விடவும்.
அதனுடன் இனிப்புக்காக கண்டெண்ஸ்ட் மில்க் (condensed milk) சேர்த்து கொள்ளலாம்.
அதன் மேல் பொடித்த ஏலக்காய் தூவி ,
தேவைப்பட்டால் சிறிது தேங்காய் துருவல் தூவி பரிமாறலாம்.

குறிப்பு:

சிறிது கெட்டியாக பாயசம் வேண்டும் என்று நினைப்பவர்கள் சிறிது தேங்காய் பால் சேர்த்து கொள்ளலாம்.
விருப்பப்பட்டவர்கள் முந்திரி இவற்றை வறுத்து பாயசத்தில் கலந்து பருகலாம்.



1 thought on “இளநீர் பாயசம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *