Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

கருணை கிழங்கு வாழைப்பூ கோலா உருண்டை

கருணை கிழங்கு வாழைப்பூ கோலா உருண்டை

இந்த கோலா உருண்டையில் கருணை கிழங்கும் , வாழைப்பூவும் பயன் படுத்தி உள்ளேன் .இவற்றின் மருத்துவ பலன்கள் அறிந்து கொள்வோமா ?

கருணை கிழங்கு:

மூலம் என்னும் வியாதிக்கு கருணை கிழங்கை ஒத்த மருந்து உலகில் வேறு எதுவும் இருக்க இயலாது. வாரம் ஒரு முறையேனும் கருணை கிழக்கை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும் .உடலுக்கு குளிர்ச்சி தர கூடியது. கோடை காலத்துக்கு ஏற்ற உணவு.

வாழைப்பூ:

வயிறு தொடர்பான வியாதிகளுக்கு தீர்வு தர கூடியது . பெண்களின் கர்ப்பபை தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணி.

தேவையான பொருட்கள்
கடலை பருப்பு -100 grm
பிடி கருணை -4
வாழை பூ – மூன்று கைப்பிடி (சுத்தம் செய்தது )
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் -2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் -1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
உப்பு – சிறிது

செய்முறை

கடலை பருப்பை நன்றாக கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

கருணை கிழங்கை சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.

வாழை பூவை நன்கு சுத்தம் செய்து அதனுடன்,

ஊறவைத்த கடலை பருப்பு, சிறிது மிளகாய் தூள் ,உப்பு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட்((இஞ்சி பூண்டு இரண்டையும் சிறிது தட்டி எடுத்து கொண்டது நல்ல சுவையை தரும். ரெடிமேட் பேஸ்ட் உபயோகிப்பதை தவிர்த்தல் நலம் )சேர்த்து மிக்ஸ்யில் சிறிது கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த விழுதுடன், வேக வைத்த கருணை கிழங்கை சேர்த்து நன்றாக பிசைந்து, உருண்டைகளாக உருட்டி எண்ணெய் காய வைத்து அதில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான கருணை கிழங்கு வாழை பூ கோலா உருண்டை தயார் 🙂



1 thought on “கருணை கிழங்கு வாழைப்பூ கோலா உருண்டை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *