Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

குருத்து மூங்கில் குழம்பு :(Method 1)

குருத்து மூங்கில் குழம்பு (Method 1)

குருத்து மூங்கில்:

பொதுவாக மலை வாழ் மக்களுக்கு இந்த குருத்து மூங்கில் நல்ல பரிச்சயமான ஒன்றாகவும் , அதை அறிந்திடாதவர்களுக்கு , என்னது ?! மூங்கில் குழம்பா என ஆச்சர்யத்தையும் கொடுக்கும்.

Photo Courtsy: Google

இது மலைப்பாங்கான இடங்களில் கிடைக்க கூடிய அரிய வகை காடுகளில் கிடைக்கும் உணவு பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது . முலையிலையே பறித்து ,உணவாக சமைத்து உண்ணலாம் . இப்போது கிடைப்பதற்கு மிக அரிதான உணவு வகைகளில் ஒன்றாக இருக்கிறது .இந்த மூங்கில் பொதுவாக புற்கள் வகையை சேர்ந்தது . ஆசிய நாடுகளில் அறியப்படும் உணவு வகைகளில் இதுவும் ஒன்று . பதப்படுத்தப்பட்ட உணவு வகை ஆகவும் கிடைக்க படுகிறது.
பொதுவாக கோடை காலம் முடிந்து , தென்மேற்கு பருவக்காற்று தொடங்கும் சமயம் தான் , மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இந்த மூங்கில் கிடைப்பதுக்கு ஏதுவான சமயம் ஆகும்.


தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்து நறுக்கிய மூங்கில் குருத்து – 1 கப்
பெரிய வெங்காயம் -2
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
தக்காளி-3
உருளை கிழங்கு – 2
தேங்காய் துருவல் – 1 /2 கப்
மல்லித்தழை – சிறிது
மிளகாய் தூள் -1 tbsp
மல்லி தூள் -1& 1/2 tbsp
கரம் மசாலா தூள்-1 tbsp
மஞ்சள் தூள்-1/2 tspn
எண்ணெய்- 2 tbsp
உப்பு – சிறிது
கருவேப்பிலை – சிறிது

செய்முறை:

குக்கர் -ல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ,அதில் அரைத்த வெங்காய பேஸ்ட் போட்டு நன்றாக வதக்கவும் .

அதனுடன் இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு வதக்கி , அதில் நறுக்கி வைத்துள்ள மூங்கில் குருத்துகளை போட்டு அடுப்பை சிம் -ல் வைத்து குறைந்தது 10 நிமிடமாவது வதக்க வேண்டும்.

அதில் ,தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் .
மூங்கில் குருத்து மெதுவாக தண்ணீர் விட துவங்கும் .

அதனுடன் நறுக்கி வைத்துள்ள உருளை கிழங்கை சேர்க்கவும்.

அதில் தேவையான அளவு மிளகாய் தூள் , கரம் மசாலா தூள் , மல்லி தூள் இவற்றை சேர்த்து பிரட்டி விடவும் .

மசாலா வாசனை நீங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும் .

5 நிமிடம் கழித்து , தேங்காய் துருவல் மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்கு அரைத்து அந்த கலவையை இந்த குழம்புடன் சேர்த்து கொதிக்க வைக்கவும் .

கொதி வந்ததும் , குக்கர் -ஐ மூடி மூன்று அல்லது 4 விசில் வந்ததும் , இறக்கி மல்லி தலை தூவி பரிமாறவும் .

குறிப்பு:
மூங்கில் குருத்து சமைக்கும் வரை நீரில் போட்டு வைக்க வேண்டும். நீண்ட நாட்களுக்கு வைத்து சமைக்க இயலாது . ஓரிரு நாளில் சமைத்திட வேண்டும்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *