Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

குருத்து மூங்கில் குழம்பு :(Method2)

குருத்து மூங்கில் குழம்பு: (Method2)

குருத்து மூங்கில்:

குருத்து மூங்கில் அல்லது மூங்கில் குருத்து. இது மலைப்பாங்கான இடங்களில் கிடைக்க கூடிய அரிய வகை காடுகளில் கிடைக்கும் உணவு பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது.இந்த மூங்கில் பொதுவாக புற்கள் வகையை சேர்ந்தது.


Photo Courtesy : Google

ஆசிய நாடுகளில் அறியப்படும் உணவு வகைகளில் இதுவும் ஒன்று . பதப்படுத்தப்பட்ட உணவு வகை ஆகவும் கிடைக்க படுகிறது .
பொதுவாக கோடை காலம் முடிந்து , தென்மேற்கு பருவக்காற்று தொடங்கும் சமயம் தான் , மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இந்த மூங்கில் கிடைப்பதுக்கு ஏதுவான சமயம் ஆகும்.


தேவையான பொருட்கள் :
சுத்தம் செய்து நறுக்கிய மூங்கில் குருத்து – 1 கப்
தட்டை பயறு / காராமணி பயறு -1 கப்
கடுகு – சிறிது
சீரகம் – 1 tspn
சிறிய வெங்காயம் -10
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
தக்காளி-2
தேங்காய் துருவல் – 1 /2 கப்
மிளகாய் தூள்
மல்லி தூள்
மஞ்சள் தூள்
எண்ணெய்
உப்பு – சிறிது
கருவேப்பிலை – சிறிது
மல்லித்தழை – சிறிது

செய்முறை:

தட்டை பயிரை நன்றாக கழுவி 1 / 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
குக்கர் -ல் தட்டை பயறு , மெல்லியதாக நறுக்கிய மூங்கில் குருத்து , சின்ன வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , மல்லி தூள் தேவையான அளவு உப்பு இவற்றை சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து குறைந்தது 8 விசில் வைத்து இறக்கவும்.

தேங்காய் மற்றும் தக்காளி சேர்த்து அரைத்த கலவையை போட்டு பச்சை வாசனை போகும் வரை பிரட்டி விடவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்ததும் , அதில் சீரகம் போட்டு பொரிந்ததும் அதில் கருவேப்பிலை போட்டு வறுத்து அதை தட்டைபயறு மூங்கில் மசாலாவுடன் போட்டு , இறக்கி மல்லி தலை தூவி பரிமாறவும்.

குறிப்பு :

தட்டை பயறு சேர்க்காமல் வேறு முறையிலும் குருத்து மூங்கிலை சமைக்கலாம் . அதை தெரிந்து கொள்ள இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும்.

குருத்து மூங்கில் குழம்பு (Method 1)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *