Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

” டமீட்டா “(Tree Tomato ) சட்னி

” டமீட்டா “(Tree Tomato ) சட்னி

Tree Tomato:(மர தக்காளி)
இது நீலகிரி பகுதிகளில் “டமீட்டா ” என்று அழைக்க படுகிறது. ஒருவேளை, ” Tree Tomato ” என்பதே கால போக்கில் டமீட்டா என்று மருவி வந்து இருக்கலாம்.:-). இது அமெரிக்க, மெக்ஸிகோ பகுதி மக்களால் விரும்பி உண்ண படுகிறது. இதை அப்படியே கூட உண்ணலாம். சமைத்தும் உண்ணலாம்.
அனைவருக்கும் இந்த சுவை பிடிக்கும் என்று கூற இயலாது. ஆனால் வித்தியாசமான சுவை கொண்ட சட்னி வேண்டும் என்று கருதுபவர்கள் நிச்சயம் இந்த Tree Tomato chutney-ஐ ஒரு முறையேனும் சுவைத்து பார்க்கலாம். இட்லி,தோசை க்கு ஏற்றதாக இருக்கும்.சாதத்திற்கும் கூட துவையல் போல வைத்து உண்ணலாம்.
Photo Courtesy: Google

தேவையான பொருட்கள்:
மர தக்காளி : 3
வரமிளகாய் -3 அல்லது 4
பூண்டு -6 பற்கள்
உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்
பெருங்காய தூள் -1 சிட்டிகை
கடுகு -1/2 ஸ்பூன்
உப்பு -சுவைகேற்ப

செய்முறை:

மர தக்காளி பழங்களை அடுப்பில் வைத்து சுட்டு தோல் உரித்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விட்டு பெருங்காய தூள் போட்டு பொரிய விடவும்.

அதில் வர மிளகாய் போட்டு நன்கு சிவக்கும் வரை வதக்கவும்.

பின்பு அதில் தோல் உரித்த பூண்டு பற்களை போட்டு நன்கு வதக்கி அதில் உப்பு சேர்த்து தோல் நீக்கிய மர தக்காளி பழங்களை போட்டு வதக்கி ,மிக்ஸ்யில் போட்டு அரைக்கவும்.

குறிப்பு:

இது புளிப்பு சுவை மிக்கது. எனவே, கூடுதலாக புளிப்பிற்கென சாதாரண புளியோ, தக்காளியோ சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் கடுகும், பூண்டும் இந்த மர தக்காளியுடன் சேர்ந்து ஒரு புதிய வித்தியாசமான சுவையை தரும்.

இதில் விட்டமின் A மற்றும் விட்டமின் B -6 அதிகமாக இருப்பது கூடுதல் சிறப்பு.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *