Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

தேங்காய் மிட்டாய்

தேங்காய் மிட்டாய்

பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இதுவும் கூட ஒன்றாக இருந்து இருக்கும். செய்வது மிக மிக சுலபம்.

தேவையான பொருள்கள்
துருவிய தேங்காய் – 1 கப்
சர்க்கரை – 3 /4 கப் அல்லது 1 கப்
ஏலக்காய் தூள் – 1 tspn
நெய் – சிறிது

செய்முறை

தேங்காயை நன்றாக துருவி கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் துருவிய தேங்காயை கொட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.

ஒரு 5 நிமிடங்கள் கழித்து சர்க்கரை நன்றாக இளக துவங்கும்.

அடுப்பை சிம் -ல் வைத்து மீண்டும் கிளறவும்.

5 நிமிடங்கள் கழித்து சிறிது (25 ml ) தண்ணீர் அல்லது பால் சேர்த்து நன்றாக கிளறவும்.

தண்ணீர் அல்லது பால் சேர்ப்பது தேங்காயை நன்றாக இலகுவாக்கும்.

தேங்காய் சர்க்கரை கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.

கடைசியாக ஏலக்காய் தூள் தூவி கிளறி விடவும்.

ஒரு தட்டில் நெய் தடவி கிளறிய சூட்டுடனே எடுத்து அதை தட்டில் பரப்பி விடவும்.

நன்றாக பரப்பி சமப்படுத்தி விரும்பிய வடிவத்தில் வெட்டி அதை நன்றாக ஆற விடவும்.

ஆறியதும் அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கலாம்.

தேங்காய் மிட்டாய்களை ஒரு வாரம் வரை வைத்து உண்ணலாம்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *