Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

நீலகிரி கிரீன் குருமா

நீலகிரி கிரீன் குருமா:(Veg / Non -veg )

Nilgiris Green Kurma

இந்த குருமா மிகவும் எளிதாக செய்ய கூடியது . பொதுவாக நீலகிரி பகுதிகளில் செய்ய கூடியது . அபார மணம் நிறைந்தது . காய்கறிகள் கொண்டும் இதை செய்யலாம்.சிக்கனிலும் இதை செய்யலாம் . இட்லி ,தோசை ,சப்பாத்தி ,பூரி போன்ற உணவு வகைகளுக்கும் ,தேங்காய் சாதம் ,ஜீரா ரைஸ் இவற்றிக்கும் மிக பொருத்தமாய் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

காய்கறிகள் ( காரட் ,பீன்ஸ் ,உருளை கிழங்கு ,டர்னிப் ,காலி பிளவர் ,பட்டாணி )-தலா 1 கப்
பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் -தலா 2
சின்ன வெங்காயம் -1 கப்
இஞ்சி- 1 துண்டு
பூண்டு – 10 பற்கள்
பட்டை – 1 துண்டு
ஏலக்காய் – 3
கிராம்பு -3
தேங்காய் துருவல் – 5 அல்லது 6 மேஜை கரண்டி
கசகசா – 1 மேஜை கரண்டி
முந்திரி பருப்பு -5 அல்லது 6 ( தேவை பட்டால் )
மல்லி தழை- ஒரு கைப்பிடி
புதினா – ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் – 4 அல்லது 5
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
எழுமிச்சை பழம்-1
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் ,அதில் பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் இவற்றை போட்டு பொரிய விடவும் .அதில் இஞ்சி ,பூண்டு ,முழு சின்ன வெங்காயம் இவற்றை போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும் .
அதனுடன் பச்சை மிளகாய் ,புதினா , மல்லித்தழை இவற்றையும் சேர்த்து நன்கு வதக்கி இந்த கலவையை ஆற விடவும் .
ஆறிய இந்த கலவையை மிக்ஸ்யில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும் .
அதே பாத்திரத்தில் மேல குறிப்பிட்டுள்ள நன்கு கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு நன்கு வதக்கி இவற்றுடன் உப்பு , ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் . சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி போட்டு நன்கு வேக விடவும் .
காய்கறிகள் நன்கு வெந்ததும் ,அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து ,தேவையான அளவு தண்ணீர் விட்டு பச்சை வாசனை நீங்கும் வரை மிதமான சூட்டில் காய் கறிகளை மசாலாவுடன் நன்கு வேக விடவும்.
நன்கு வெந்தவுடன் அதில் தேங்காய் , கசகசா , முந்திரி பருப்பு (தேவைப்பட்டால் ) இவற்றை சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து அந்த கலவையை வெந்த காய்கறி மசாலாவுடன் கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி எலுமிச்சம் பழ சாறு பிழிந்து ,புதினா , மல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு:
இதே முறையில் சிக்கனை காய்கறிகளுக்கு பதிலாக பயன்படுத்தலாம் . அபாரமான சுவையுடன் இருக்கும் .



1 thought on “நீலகிரி கிரீன் குருமா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *