Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

பப்பாளி பழ ஜாம்

பப்பாளி பழ ஜாம்

பழங்கள் நிறைய வாங்கி வந்து வைத்தாலும் குழந்தைகள் அவற்றை விரும்பி உண்பார்களா என்பது சந்தேகமே. அதனால் வீணாய் போகும் என வருத்தப்படாமல் அதை jam ஆக செய்து வைத்தால் அவ்வ போது சப்பாத்தி, பிரட் இவற்றோடு வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம் . நாமே தயாரிப்பதால் அதில் எந்த விதமான உடல் கேடு விளைவிக்கும் பொருட்கள் (preservative ) பற்றிய பயம் இன்றி அனைவரும் உண்ணலாம்.

தேவையான பொருட்கள் :
பப்பாளி பழம் -1
சர்க்கரை – 250 Grms
எழுமிச்சை பழம் -1/2 மூடி

செய்முறை:

பப்பாளி பழத்தை தோல் சீவி, உள்ளிருக்கும் கொட்டைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக மிக்ஸி ஜார் -ல் இட்டு கூழ் போன்று அரைத்து கொள்ளவும்.
அதை ஒரு அடி கனமான பாத்திரத்தில் இட்டு அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக அடுப்பில் வைத்து கிளறவும்.
ஒரு 15 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து கிளறி, கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி அதில் அரைமூடி எலுமிச்சம் பழம் பிழிந்து மீண்டும் ஒரு முறை கிளறி ஆறியதும், காற்று புகாத வண்ணம் ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்து ஒரு மாதம் வரை உபயோகப்படுத்தலாம்.
செய்வதும் மிக சுலபம்.
பழங்கள் வீணாகும் என்ற கவலையும் இருக்காது.
குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.

குறிப்பு:

எலுமிச்சம் பழ சாறு சேர்ப்பது மூலம் நாம் வீட்டில் தயாரிக்கும் ஜாம் வகைகள் சீக்கிரம் கேட்டு போகாமல் இருக்கும்.
எலுமிச்சம் சாறு ஒரு Natural Preservative ஆகும்.
ஈர கரண்டிகள் உபயோக படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
கண்ணாடி பாட்டில்களில் ஜாம், ஊறுகாய் இவற்றை போட்டு உபயோக படுத்துவது நல்லது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *