Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

பாரம்பரிய நாட்டுக்கோழி மிளகு வறுவல்

பாரம்பரிய நாட்டுக்கோழி மிளகு வறுவல்

நாட்டுக்கோழி என்பதால் நல்லெண்ணெய் பயன் படுத்தி கொள்வது மிக நல்லது. அப்போது அரைத்த மசாலா என்பதால் ருசி மிக அதிகம். இது கிட்ட தட்ட 100 வருடத்திய சமையல் என்பது கூடுதல் தகவல்.

இதில் மிளகு நிறைய சேர்க்க பட்டு உள்ளதால் சளி பிடித்து இருக்கும் வேளைகளில் உண்ணும் போது நல்ல பலனை தரும்.செய்வது மிக சுலபமும் கூட.

தேவையான பொருட்கள்:
மிளகு -2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய்-1 ஸ்பூன்
நாட்டுக்கோழி -1/2 kg
பச்சை மிளகாய் -1
தேங்காய்-ஒரு கீற்று (அதிகமானால் ருசி மற்றும் நிறம் மாறுபடும் )
பட்டை- 1
கிராம்பு -2
இஞ்சி -ஒரு சிறிய துண்டு
பூண்டு பற்கள் -6
சின்ன வெங்காயம் – 6
மல்லித்தழை -சிறிது
கருவேப்பில்லை -சிறிது
மஞ்சள் தூள் -சிறிது
உப்பு- ருசிகேற்ப

செய்முறை:

இது மிகவும் சுலபமான மற்றும் ருசியான உணவு ஆகும்.
நாட்டுக்கோழி துண்டுகளை நன்றாக மஞ்சள் தூள் சேர்த்து கழுவி சுத்தப்படுத்தி வைத்து கொள்ளவும்.
மேலே கூறப்பட்டுள்ள மிளகு, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், மல்லித்தழை ,கிராம்பு, பட்டை, தேங்காய், பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸ்யில் இட்டு நன்றாக மைய அரைத்து கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த அரைத்த விழுதை அதில் இட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .
கழுவிய நாட்டுக்கோழி துண்டுகளை அந்த மசாலாவில் போட்டு நன்றாக பிரட்டி தேவையான அளவு கல் உப்பு அல்லது சாதாரண உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு அடுப்பை சிம் -இல் வைத்து ஒரு அரை மணி நேரம் வேக விடவும்.
தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.வேகும் போது சிக்கனில் நீர் இருக்கும்.தேவைப்பட்டால் சிறிது சேர்த்து கொள்ளலாம்.
நாட்டுக்கோழி நன்றாக வெந்ததும் அதை தண்ணீர் இல்லாமல் நன்றாக வறுவல் பதத்திற்கு பிரட்டி கருவேப்பில்லை, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்பு:

இந்த ருசி மிகுந்த பாரம்பரிய நாட்டுக்கோழி மிளகு வறுவலை எப்படி சமைப்பது என்ற செய்முறை விளக்கத்தை காண, கீழ்வரும் லிங்க் -ஐ கிளிக் செய்யவும் .

இதில் குறிப்பிடப்பட்டு உள்ள அளவை மாற்றாமல் சமைப்பது நல்ல ருசியை கொடுக்கும். குறிப்பாக, பச்சை மிளகாய், தேங்காய் இவற்றை கொஞ்சம் அதிகமாக பயன் படுத்தினாலும் இந்த சமையலின் ருசியை முழுதுமாக மாற்றி விடும். அதில் சிறிது கவனம் தேவை.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *