Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

பாலக் என்கிற பசலை கீரை Smoothie

பாலக் என்கிற பசலை கீரை Smoothie

இன்றைய பரபரப்பான வாழ்வியல் சூழலில் இரண்டில் ஒரு பெண்ணிற்கு அனிமியா எனப்படும் இரத்தசோகை இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இரத்தசோகை ஏற்பட மிக முக்கிய காரணமே இரும்பு சத்து இல்லாமல் இருப்பது தான். பெண்கள் தான் மிக அதிகமாக இரத்தசோகை நோயினால் பாதிக்க படுகிறார்கள். இந்த பசலை கீரையில் அதிக படியான இரும்பு சத்து காணப்படுகிறது . இதை பேரிச்சம் பழத்தோடு சேர்த்து உண்ணும் போது இன்னும் கூடுதலாக இரும்பு சத்து நம் உடலில் போய் சேருகிறது. இந்த செய்வதும் மிக சுலபம். வாரத்திற்கு ஒரு முறையேனும் இந்த உணவில் சேர்த்து கொள்வது நன்மை பயக்கும்.

தேவையான பொருட்கள்:
பசலை கீரை – 1 கப்
வாழை பழம் ( பூம்பழம் ) – 2
பேரிச்சம் பழம் – 5 அல்லது 6
தோல் நீக்க பட்ட பாதாம் – 5 அல்லது 6 ( தேவை பட்டால்)

செய்முறை:

பேரிச்சம் பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு, அதை சிறிது தண்ணீரில் ஒரு 10 நிமிடம் ஊற வைக்கவும்.
பசலை கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
வாழை பழத்தை நறுக்கி வைத்து கொள்ளவும்.
அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக கூழ் போல அரைத்து கொள்ளவும்.
பசலை கீரை smoothie தயார்.
அதன் மேல் தேவை பட்டால் தோல் உரித்த நறுக்கிய பாதாம் பருப்புகளை தூவி பரிமாறலாம்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *