Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

பாவக்காய் ஊறுகாய்

பாவக்காய் ஊறுகாய்:

பாவக்காய் என்றாலே கசப்பு என்று பல பேர் அதை தொடுவதே இல்லை.ஆனால் ,பாவக்காயின் கசப்பு தன்மை உடம்பிற்கு பல்வேறு வகையில் பயனுள்ள அருமருந்து .இந்த பாவக்காய் ஊறுகாய் செய்வதும் மிக சுலபம் .தவிர ,நாள் பட கசப்பு என்பதே சிறிதும் இருக்காது.

தேவையான பொருட்கள்:

பாவக்காய் -2
நல்லெண்ணெய் -100 கிராம்
மிளகாய் தூள் -காரத்திற்கு ஏற்ப
வெந்தைய பவுடர் -2 டீ ஸ்பூன்
பெருங்காய பவுடர் -1 டீ ஸ்பூன்
கடுகு -1 ஸ்பூன்
கல் உப்பு -சுவைக்கேற்ப.
வினிகர் -150 ml

செய்முறை:

பாவக்காயை நன்றாக கழுவி துடைத்து விட்டு அதை நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும் .அதை ஈரம் இல்லாத ஒரு பாத்திரத்தில் விட்டு அதோடு கல் உப்பை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
ஒரு 10 நிமிடங்கள் கையால் பிசைந்து விட்டு ,அதை அப்படியே ஒரு நாள் மூடி போட்டு வைத்து விட வேண்டும் .கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தல் மிக நல்லது.
மறுநாள் ,ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ,அதில் கடுகை போட்டு பொரிய விடவும் .அடுப்பை சிம்-இல் வைத்து அதில் பெருங்காய தூள் ,வெந்தைய தூள் இவற்றை போட்டு பொரிந்ததும் அதில் மிளகாய் தூள் போட வேண்டும்.
மறு நிமிடமே ஊற வைத்துள்ள பாவக்காயை போட்டு சில நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
பாவக்காய் ஒரு அளவு வதங்கியதும் ,அதில் வினிகரை ஊற்றவும்.
அடுப்பை சிம்-இல் வைத்து வினிகர் வற்றும் வரை நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
வினிகர் முழுவதும் வற்றி எண்ணெய் ஊறுகாயில் இருந்து பிரிந்து வர தொடங்கும்.
நன்கு ஊறுகாய் பதத்திற்கு வந்ததும் ,அடுப்பில் இருந்து இறக்கி ,ஆறவைத்து மீண்டும் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஊறியதும் எடுத்து உபயோக படுத்தலாம்.

குறிப்பு:

பெருங்காய தூள் ,வெந்தய தூள் இவற்றை எண்ணையில் போட்டு பொரிந்த உடனே மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.
மிளகாய் தூளை எண்ணையில் போட்டதும் கருக விட கூடாது .உடனே பாவக்காயை சேர்த்து விட வேண்டும்.
வெந்தைய தூள் இல்லை எனில் ,தேவையான வெந்தயத்தை எடுத்து வெறும் வாணலியில் விட்டு கருகாமல் வறுத்து ஆற வைத்து தூள் செய்து கொள்ளலாம் .
மேலே குறிபிட்டுள்ள அளவு படி எண்ணெய் அல்லது வினிகர் தேவை எனில் பாவக்காயை வதக்கும் போது கொஞ்சம் சேர்த்து கொள்ளலாம்.
கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களில் ஊறுகாய் வைப்பதன் மூலம் ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாது .சுவையும் மாறாது.ஈர ஸ்பூன்கள் பயன் படுத்த கூடாது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *