Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

பிரொக்கோலி உருளை கிழங்கு குருமா

பிரொக்கோலி உருளை கிழங்கு குருமா

Broccoli gravy

பிரொக்கோலி (Broccoli) என்பது மிக சிறந்த கான்செர் தடுப்பு காரணியாகவும் ,கொழுப்பை குறைக்கவும் ,சிறந்த Antioxidant ஆகவும் செயல் படும் காய்கறி ஆகும்.அடிக்கடி இதை உணவில் சேர்த்து கொள்வது நன்மை பயக்கும்.
இப்போது பிரொக்கோலி உருளை கிழங்கு குருமா செய்வது எப்படி என காணலாம் .இந்த குருமா ,சாதம்,சப்பாத்தி ,தோசை ,இட்லி ,இடியாப்பம் என அனைத்திற்குமே ஏற்ற உணவு வகையாகும்.
செய்வதும் சுலபம்.

செய்முறை:
Broccoli – 1 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
உருளை கிழங்கு -3
பெரிய வெங்காயம் -1
இஞ்சி -1 துண்டு
பூண்டு -8 பற்கள்
தக்காளி -3
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
மல்லி தூள் -1 ஸ்பூன்
சீரக தூள் -1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் -1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் -1/2 மூடி
கருவேப்பிலை -சிறிது
உப்பு -தேவையான அளவு
எண்ணெய்-2 ஸ்பூன்

செய்முறை:

பிரொக்கோலி யை சிறு துண்டுகளாக நறுக்கி ,சிறிது வெந்நீரில் உப்பு போட்டு அந்த நீரில் கழுவி சுத்தம் செய்து எடுத்து வைக்கவும்.
(இந்த முறையில் சுத்தம் செய்வது மூலமாக ,அதில் சிறு பச்சை நிற புழுக்கள் ,சிறு சிறு பூச்சிகள் இருந்தாலும் வெளியேறி விடும்).

cooker இல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ,அதில் ,பெரிய வெங்காயம் ,பூண்டு ,இஞ்சி ,சிறிது கருவேப்பிலை இவற்றை மிக்ஸ்யில் போட்டு அரைத்த கலவையை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் ,சீரக தூள் ,மஞ்சள் தூள் ,கரம் மசாலா தூள் இவற்றையும் போட்டு அடுப்பை சிம் இல் வைத்து நன்றாக வதக்கவும்.
அதில் நறுக்கிய பிரொக்கோலி ,உருளை கிழங்கு இவற்றையும் சேர்த்து ,வதக்கி சிறிது உப்பு சேர்க்கவும்.
அதில் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் ,மல்லி தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் .பச்சை வாசனை நீங்கியதும் அதில் ,தக்காளி ,தேங்காய் துருவல் இரண்டும் சேர்த்து அரைத்த கலவையை போட்டு கொதிக்க வைத்து cooker மூடி விடவும்.
2 அல்லது 3 விசில் வந்ததும் இறக்கி பரிமாறலாம்.
Broccoli உருளை கிழங்கு குருமா ரெடி 🙂



8 thoughts on “பிரொக்கோலி உருளை கிழங்கு குருமா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *