Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

மணத்தக்காளி கீரை துவையல்

மணத்தக்காளி கீரை துவையல்

கீரைகளில் மணத்தக்காளி ஒரு வர பிரசாதம். ஆனால்,சுலபமாக கிடைக்கும் கீரை என்பதாலோ என்னவோ அதன் மருத்துவ குணங்கள் நம்மில் பல பேருக்கு தெரிவது இல்லை. கசப்பு என்று ஒதுக்கி வைத்து விடுகின்றனர். இந்த கீரை மட்டும் அல்லாது அதன் காய், பழம் அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. நிறைய கீரை கிடைத்தால் அதை பொறியலாகவும், கூட்டாகவும், கடைந்தும் சாப்பிடலாம். குறைவாக கிடைக்கும் நாட்களில் துவையல் செய்து சாப்பிடலாம்.


மருத்துவ பலன்கள்:
* வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். ஏனெனில் வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றுப்புண்ணும் இருக்கும்.

* தொண்டை கரகரப்பு நீக்கும்.

* செரிமான பிரச்சனை நீக்க வல்லது.

*

சருமத்தில் அலர்ஜி மற்றும் காய்ச்சல் வந்தால், கை கால் போன்றவை வலி எடுக்கும். இத்தகைய வலியையும், காய்ச்சலையும் போக்க இந்த கீரையை சாப்பிடுவது சிறந்தது.

*

இந்த கீரையின் பழம் “Fragmented Tomato ” என்று ஆங்கிலத்தில் அழைக்க படுகிறது. கருப்பு நிறத்தில் உள்ள இந்த பழம் மிகுந்த இரும்பு சத்து நிறைந்தது.

*

காசநோய் உள்ளவர்கள் இந்த கீரையின் பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது.

*

அதிகப்படியான களைப்பு சோர்வு இவற்றை நீக்க வல்லது.

தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை – 1 கப்
பெருங்காய தூள் – 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் – 1
பச்சை மிளகாய் – 2
உளுத்தம் பருப்பு – 1 மேஜை கரண்டி
பூண்டு – 5 அல்லது 6 பற்கள்
சின்ன வெங்காயம் – 10
மிளகு – 5 அல்லது 6
தேங்காய் துருவல் – 1 /2 கப்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 ஸ்பூன்

செய்முறை:
அடி கனமான வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் பெருங்காய தூள் போட்டு பொரிய விடவும். அதில் ஒரு காய்ந்த மிளகாய் போட்டு நன்கு சிவக்க வறுத்து அதனுடன் உளுத்தம் பருப்பை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும். அதில் மிளகு, பூண்டு பற்கள், பச்சை மிளகாய் இவற்றை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்பு அதில் சிறிய வெங்காயத்தை போட்டு அதன் நிறம் மாறும் வரை வதக்கவும்.
அதனுடன் கழுவி சுத்தம் செய்யப்பட்ட மணத்தக்காளி கீரையை போட்டு நன்கு வதக்கி இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற விடவும்.
ஆறியதும் இந்த கலவையை ஒரு மிக்ஸியில் இட்டு அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் புளி இவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
மணத்தக்காளி கீரை துவையல் தயார்.
இதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்து தென் இந்திய உணவுகளோடு சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது.



1 thought on “மணத்தக்காளி கீரை துவையல்”

Leave a Reply to Thilakkumar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *