Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

முள் சீதா பழ மில்க் ஷேக்

முள் சீதா பழ மில்க் ஷேக்

முள் சீதா:

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

சீதா பழம் என்பது பொதுவாக நாம் அறிந்தே ஒன்றே ஆனால், நாம் கடைகளில் வாங்கும் சீதா பழம் தவிர, ராம் சீதா, முள் சீதா, African Pride , Late Gold என பலவகை இவற்றுள் பல வகை உண்டு .
இன்று என் சமயலறையில் உபயோகப்படுத்த பட்டது முள்சீதா. ஒரு வார்த்தையில் சொல்வதென்றால் கேன்சர் குணமாக முள் சீதா சாப்பிட வேண்டும் .அவ்வளவே !

முள் சீதா(Photo Courtesy: Google)

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது என்பது உண்மை என்றாலும் , இந்தியாவிலும் இது பரவலாக கிடைக்கிறது . 3 முதல் 4 கிலோ வரை விளைய கூடியது . ஊட்டி சுற்றுலா செல்பவர்கள் பர்லியார் பகுதிகளில் இந்த பழம் கிடைத்தால் miss பண்ணாதீங்க . மருத்துவ குணங்களுக்கான பயன்பாட்டினால் விலை சற்று கூடுதல் என்பதும் மறுப்பதற்கு இல்லை .கோவையில் இது ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டு மருத்துவத்திற்காக உபயோகப்படுத்த படுகிறது .
இந்த மரத்தின் இலை கூட சிறந்த கேன்சர் கொல்லியாக செயல் படுகிறது என்ற அறிய தகவலை தெரிவிப்பதில் என் சமையலறை பெருமை கொள்கிறது .

தேவையான பொருட்கள்:
முள்சீதா pulp = 1 கப்
கொதிக்க வைத்து குளிர்படுத்த பட்ட பால் – 1 கப்
சர்க்கரை – தேவையான அளவு
தேன்- சிறிது

செய்முறை

முள்சீதா pulp , கொதிக்க வைத்து குளிர்படுத்த பட்ட பால் ,சர்க்கரை இவற்றை மிக்ஸியில் இட்டு நன்றாக கூழ் போல அரைத்து கொள்ளவும்.
அதை Serving கப் இல் ஊற்றி அதன் மேல் தேன் ஒரு ஸ்பூன் ஊற்றி பரிமாறவும்.
தேன் உங்கள் முள் சீதா மில்க் ஷேக் -ஐ அற்புதமான இனிப்பாக மாற்றும் 🙂



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *