Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

மூங்கில் அரிசி குழிபணியாரம்

மூங்கில் அரிசி குழிபணியாரம்

மூங்கில் அரிசி:

மூங்கில் அரிசி என்பது கிடைப்பதற்கு மிகவும் அரிதான ஒன்று.
மூங்கில் ஒன்று 40 – 60 ஆண்டு காலம் நன்றாக விளைந்து அதில் பூக்கள் மலரும் நிகழ்வு என்பது அந்த மூங்கிலின் இறுதி காலத்தை குறிக்கும் . அந்த நிகழ்வு ஆங்கிலத்தில் “Bamboo Blossom ” என்று குறிப்பிடப்படுகிறது .அத்தகைய சமயத்தில் மூங்கிலில் இருந்து கிடைக்க பெறுவதே மூங்கில் அரிசி ஆகும் .

Bamboo Blossom (Photo Courtesy: Google)

தேவையான பொருட்கள்:
மூங்கில் அரிசி – 250 grm
கருப்பட்டி / நாட்டு சர்க்கரை – 250 grm
ஏலக்காய் பவுடர் – 1 / 2 ஸ்பூன்
நறுக்கிய தேங்காய் துண்டுகள் – 1 /2 கப்
முட்டை – 1 அல்லது 2

செய்முறை

மூங்கில் அரிசியை நன்றாக கழுவி 3 அல்லது 4 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
பின்பு அதை மிஸ்யில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு நன்றாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு அதில் கருப்பட்டி / நாட்டுசர்க்கரைபோட்டு நன்றாக கரைத்து ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின்பு அதை வடிகட்டி அரைத்து வைத்துள்ள மாவுடன் கலந்து கொள்ளவும்.
அதனுடன் , ஏலக்காய் தூள் , நறுக்கிய தேங்காய் துண்டுகள் இவற்றை சேர்த்து ஒரு 15 நிமிடம் வைக்கவும்.
அதில் ஒன்று அல்லது 2 முட்டை ஊற்றி நன்றாக கலக்கி வைக்கவும்.
அடுப்பில் பணியார சட்டி வைத்து காய்ந்ததும் சிறிது எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
ஒவ்வொரு அச்சிலும் மாவை ஊற்றி ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும்.
பிறகு அதை ஒவ்வொன்றையும் திருப்பி போட்டு வேக விடவும்
சிறிது மொறுமொறுப்பாக , dark brown கலர் வந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

குறிப்பு :

முட்டை பிடிக்காகவார்கள் ஒரு 50 grm உளுந்தை மூங்கில் அரிசி உடன் சேர்த்து ஊற வைத்து அரைத்து கொள்ளலாம்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *