Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

மேரக்காய்/சௌவ் சௌவ் மிளகு வறுவல்

இதன் பூர்வீகம் மெசோ-அமெரிக்கா எனப்படும் இடை அமெரிக்க பகுதி என்றாலும் இன்று இது உலகம் முழுவதும் பயிரிட படுகிறது. இதை நறுக்கும் போது ஒரு வித பிசுபிசுப்பு தன்மை கொண்ட திரவம் வெளியேறுவதை காணலாம். மிக மென்மை தன்மை கொண்ட கைகளுக்கு சில சமயம் அது எரிச்சல் உண்டு பண்ணும். அந்த பிசுபிசுப்பை நீக்குவது எப்படி என்று என் பாட்டியிடம் இருந்து நாங்கள் கற்று கொண்ட சுலபமான முறையும் இந்த பதிவில் வெளியிட்டு இருக்கிறேன் .

மேரக்காய்/சௌவ் சௌவ் நறுக்குவது எப்படி ?

மேரக்காயை குறுக்காக இரண்டாக வெட்டவும்.
வெட்டிய இரண்டு பாகங்களையும் சீராக ,வட்ட வடிவில் ஒன்றுடன் ஒன்று மெதுவாக தேய்க்கவும்.

வெள்ளை நுரை போன்று அதன் பிசுபிசுப்பு வெளியேறும்.
அதை நீக்கி விடவும்
குளிர்ந்த நீரில் மேரக்காயை கழுவவும்.

தேவையான பொருட்கள்
மேரக்காய்/சௌ சௌ -1
தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு -1 /2 ஸ்பூன்
கருப்பு மிளகு தூள் -1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

மேற்கூறிய முறை படி ,மேரக்காயின் பிசுபிசுப்பை நீக்கிய பிறகு அதன் தோல் மற்றும் உள்ளிருக்கும் விதையையும் நீக்கி விடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் தேங்காய் எண்ணையை ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகை அதில் பொரிய விடவும்.
அதில் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள மேரக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.
நன்றாக வதக்கியதும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
மீண்டும் ஒரு முறை கிளறி மூடி போட்டு அடுப்பை சிம்-இல் வைத்து 5 -10 நிமிடம் மேரக்காயை நன்றாக வேக விடவும்.
(தண்ணீர் சேர்க்க தேவை இல்லை.
மேரக்காய் வெந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு மிளகு தூள் தூவி கிளறவும்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *