Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

வல்லாரை கீரை சாலட்

வல்லாரை கீரை சாலட்

வல்லாரை கீரை இந்திய மூலிகைகளில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. நினைவு திறனை அதிக படுத்தும் முக்கிய பங்கு வல்லாரை கீரைக்கு உண்டு.
இதை கூட்டு, தொக்கு என்று பலவகைகளில் சமைத்து உண்ணலாம் . இருந்தும், சமைத்து உண்ணும் உணவு வகைகளை விட சமைக்காமல் உண்ணும் போது அதன் சத்து முழுதும் அப்படியே கிடைக்கும்.
ஸ்ரீலங்கா வில் இந்த வல்லாரை ” கொட்டு கொலா (Gotu Kola)” என்று அழைக்க படுகிறது.
வைட்டமின் C சத்து இதில் மிக அதிகம் என்பதாலும், நினைவு திறனை அதிக படுத்தும் என்பதாலும், அங்கு உள்ள ஏழை சிறுவர்கள் தங்கி பயிலும் விடுதிகளில் இந்த கீரையை நறுக்கிய பச்சை மிளகாய் ,சின்ன வெங்காயத்துடன் வைத்து உப்பு தூவி மதிய உணவில் ஊறுகாய் போல பரிமாறுவார்களாம்.
என் சமையல் அறை நேயர்களுக்காக, இன்னும் சிறிது மாறுதல்களுடன் அதே வல்லாரை கீரை இப்போது வல்லாரை கீரை சாலட் ஆக 🙂
இதே சாலட் தயாரிக்கும் முறையை உங்களுக்கு பிடித்தமான வேறு கீரைகளுக்கும் உபயோக படுத்தலாம்.

தேவையான பொருட்கள் :
வல்லாரை கீரை – 1 கப்
நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 ஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் – 1 ஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 1 / 2 மூடி
மிளகு தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வல்லாரை கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் இவற்றை தலா 1 ஸ்பூன் கலந்து கொள்ளவும்.
அதில் 1 / 2 மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொள்ளவும்.
அதில் உப்பு மற்றும் மிளகு தூள் தூவி 5 நிமிடம் கழித்து பரிமாறவும்.

குறிப்பு:
உங்களுக்கு பிடித்தமான கீரை வகைகளையும் இது போல சாலட் ஆக செய்து உண்ணலாம்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *