Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

Kabsa Laham (Arabian Dish) கப்ஸா லஹம்

கப்ஸா லஹம்

Kabsa Laham

தேவையான பொருள்கள்:
பாசுமதி அரிசி -1/2 kg
மட்டன் ( எலும்புடன் கூடியது ) -1/2 kg
குடை மிளகாய் -1
(குடை மிளகாய் பிடிக்காதவர்கள் பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.
எண்ணிக்கை -5 அல்லது 6)
பூண்டு -6 பற்கள்
பெரிய வெங்காயம் -1
வெண்ணை -2 டேபிள் ஸ்பூன்
(தேவை பட்டவர்கள் -2 ஸ்பூன் எண்ணெய் உடன் சேர்த்து கொள்ளலாம்.)
ஏலக்காய் -4
தக்காளி (நன்கு பழுத்தது)-4
காரட்-2
வெள்ளை மிளகு தூள் -1/2 ஸ்பூன்
சீரக தூள் -1 ஸ்பூன்
கரம் மசாலா -1/2 ஸ்பூன்
சிக்கன் stock cube -1
(இதில் மட்டன் stock cube தான் பயன் படுத்த படுகிறது .அது கிடைக்காதவர்கள் chicken stock cube பயன் படுத்தலாம் .சூப்பர் மார்க்கெட் கடைகளில் கிடைக்கிறது )
எழுமிச்சை பழம் -1
(இதற்கு பதில் அங்கு dried லெமன் பயன் படுத்த படுகிறது )
குங்கும பூ -ஒரு சிட்டிகை
(கிடைக்க பெறாதவர்கள் கேசரி பவுடர் பயன் படுத்தலாம் )
உலர்திராட்சை -1/4 கப்
உப்பு -தேவையான அளவு


செய்முறை:

மட்டன்-ய் நன்றாக கழுவி சுத்தம் செய்து உப்பு சேர்த்து தனியே வேக விடவும் .
பாசுமதி அரிசியை கழுவி தண்ணீர் இல்லாமல் வடிய விடவும் .
தக்காளி பழங்களை மிக்ஸ்யில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
காரட் -ய் நறுக்கி மிக்ஸ்யில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து ,கசடு இல்லாமல் வெறும் ஜூஸ் மட்டும் எடுத்து வைக்கவும்.

அடுப்பில் cooker வைத்து காய்ந்ததும் அதில் வெண்ணையை போட்டு உருக்கி அதில் ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.

அதனுடன் நறுக்கிய பூண்டு பற்களை போட்டு வதக்கவும்.
அதில் ,வெங்காயம் மற்றும் மிளகாய் இரண்டையும் சேர்த்து அரைத்த விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை அடுப்பை சிம்-இல் வைத்து குறைந்தது 5 நிமிடங்களாவது வதக்க வேண்டும் .

பின் அதில் மட்டன் வேக வைத்த நீரை மட்டும் தனியே எடுத்து ஊற்றி .அதில் மிளகு தூள் ,கரம் மசாலா தூள் ,சீரக தூள் உப்பு இவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

அதில் சிறிது தண்ணீர் விட்டு சிக்கன் stock cube -ய் கரைத்து அதையும் சேர்த்து கொதிக்க விடவும் .அதில் கழுவிய அரிசியையும் சேர்த்து நன்றாக கிளறி கடைசியில் கேசரி பவுடர் மற்றும் ,எழுமிச்சை சாறு அல்லது காய்ந்த எலுமிச்சம்(Dried Lemon) பழத்தை இரு துண்டுகளாக நறுக்கி சேர்த்து விடவும்.

பாசுமதி அரிசிக்கு 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் வீதம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.(அதில் கரட் ஜூஸ் ,தக்காளி சாறு ,மட்டன் வெந்த தண்ணீர் இவற்றை எல்லாம் கணக்கில் கொள்வது அவசியம்.

cooker மூடி 2 விசில் வந்ததும் இறக்கி அதில் உலர்திராட்சை தூவி சுட ,சுட பரிமாறலாம்.

(இதற்கு என்று பிரத்தியேகமான முறையில் மட்டன் sauce தயாரிக்க படுகிறது .அதன் செய்முறை வேறு ஒரு பதிவாக விரைவில் ……!)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *