Straight from Uma's Kitchen

Straight from Uma's Kitchen

Tamil

சமையல், உணவு என்னும் சொற்களை எல்லாம் நாம் சுலபமாக கடந்து சென்று விட இயலாது. உண்மையில் சமையலும், அதன் அபரிமிதமான சுவையும் ஒரு வித மாய கலை (Magic). அதிலும் இந்திய சமையலும், விருந்தோம்பலும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தது என்பதையும் நம்மால் மறுக்க முடியாது . எனக்கும் அவ்வண்ணமே, நான் ருசித்த, சமைத்த உணவுகளை பற்றியும் அவற்றின் உபயோகம் பற்றியும் என்னால் முடிந்த வரை அனைவர்க்கும் தெரிய படுத்த வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. அதுவே, ” என் சமையலறை “ என்னும் இந்த வலை பக்கத்தை உருவாக்கவும் மூல காரணமாக அமைந்தது.
மட்டும் இல்லாமல்,
பிறந்து வளர்ந்தது அனைத்தும் நீலகிரி மாவட்டம் என்பதால், இயற்கையோடு ஒன்றி வாழும் வாய்ப்பு இயல்பாகவே அமைந்து விட்டது. குளிர் சாதன பெட்டியில் இல்லாத, வீட்டில் விளைந்த, அப்போது பறித்து சாப்பிட்ட காய்கறிகள், பழங்கள், நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே கிடைக்கும், சமைக்கும் வித்தியாசமான உணவுகள் பற்றியும் மற்றவர்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என்ற ஆவல் மிக அதிகமாக இருந்தது.
இரண்டாவது , பாட்டி மற்றும் அம்மா இருவருமே மிக அற்புதமாக சமைப்பவர்கள். அவர்கள் சமைக்கும் உணவுகளில் பெரும்பாலான உணவுகள் 70 வருடங்களுக்கு மேலான பாரம்பரியத்தை கொண்டவை. அவர்கள் சமையலின் சுவை தான் எனக்கும் சமைக்கும் ஆர்வத்தை உண்டு பண்ணியது என்றால் மிகை அல்ல .துரிதஉணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் விரும்பி உண்ணும் இந்த காலகட்டத்தில் என் அம்மா மற்றும் பாட்டியிடம் இருந்து நான் கற்று கொண்ட அரை நூற்றாண்டுகளை கடந்த ஒரு சில உணவு வகைகளை பலரும் அறிய செய்ய வேண்டும் என்ற ஆவலும் இருந்தது.
மூன்றாவது, நான் எங்காவது பயணம் மேற் கொள்ள நேரும் போது, அங்கு உள்ள வித்தியாசமான உணவுகளை பற்றி அறிந்து கொள்வதிலேயே ஆர்வம் எப்போதும் அதிகமாக இருக்கும். அதனால், புது புது உணவுகளை ருசித்ததில் என்னை அதிகம் கவர்ந்த உணவுகளில் சிலவற்றை பற்றி தெரியப்படுத்தும் எண்ணமும் இருந்தது.
இப்படியாக, நான் அதிகமாக சாப்பிட்டு பழகிய உணவுகள், அம்மா, பாட்டியிடம் இருந்து கற்று கொண்ட உணவுகள், பல இடங்களில் பயணம் மேற்கொண்டு அங்கு இருந்து நான் அதிகம் விரும்பிய மற்றும் கற்று கொண்ட மிக வித்தியாசமான உணவுகள் இவற்றை எல்லாம் பற்றி தெரியபடுத்தவே இந்த வலை பக்கத்தை உருவாகினேன்.
இதன் மூலம் நீங்களும் ஒரு சில வித்தியாசமான உணவுகளை பற்றி தெரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

“என் சமையலறை” யில் உள்ள உணவு முறைகள் அனைத்துமே பல்வேறு மக்களையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உருவாக்க பட்டது.தமிழ் மக்களுக்கு பயன் படும் வகையில், இந்த பக்கத்தில் தாய்மொழி தமிழில் செய்முறை விளக்கங்களை கொடுப்பதில், ” என் சமையலறை “ பெருமை கொள்கிறது. 🙂

உணவுகளும், அவற்றின் செய்முறை விளக்கங்களும்:
நீலகிரி கிரீன் குருமா
பச்சை சுண்டைக்காய் குழம்பு
பாவக்காய் ஊறுகாய்
ப்ரோக்கோலி உருளை கிழங்கு குருமா
கப்ஸா லஹம்
முள் சீதா பழ மில்க் ஷேக்
மூங்கில் அரிசி குழிபணியாரம்
குருத்து மூங்கில் குழம்பு (Method 1)
குருத்து மூங்கில் குழம்பு (Method 2)
அங்காய பொடி
அங்காய பொடி கலந்த தக்காளி சாதம்
இளநீர் பாயசம்
தேங்காய் மிட்டாய்
” டமீட்டா “(Tree Tomato ) சட்னி
கருணை கிழங்கு வாழைப்பூ கோலா உருண்டை
பப்பாளி பழ ஜாம்
வல்லாரை கீரை சாலட்
வாழை பூ வடை
மணத்தக்காளி கீரை துவையல்
பாரம்பரிய நாட்டுக்கோழி மிளகு வறுவல்
பாலக் என்கிற பசலை கீரை Smoothie
நெல்லிக்காய் ரசம்/சூப் (Two-in-One Special)
மேரக்காய்/சௌவ் சௌவ் மிளகு வறுவல்